அமெரிக்க எம்பிக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ட்ரம்பின் ஆதரவாளரான ரைடர் வினிகர் என்பவருக்கு 33 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ரைடர் வினிகர் என்பவர் அமெரிக்காவின் முன்னால் அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்புக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் ஆறு எம்பிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் […]
