இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக மாஸ்டர் கார்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மாஸ்டர் கார்டு மற்றும் பிசிசிஐ இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் 2022-23 ஆம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு தலைப்பு ஆதரவாளராக செயல்படும். இதற்காக பிசிசிக்கு மாஸ்டர் கார்டு எவ்வளவு தொகையை செலுத்தும் என்பது வெளியிடப்படவில்லை. ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் பிசிசிஐ சார்பில் […]
