உத்தரகண்ட் மாநிலத்தில், டேராடூன் பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இது முக்கியமான வழித்தடம் என்பதால் எப்பொழுதும் அங்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். பாலம் திடீரென்று இடிந்து விழுந்த காரணத்தினால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு […]
