அனைத்து பருவங்களிலும் வாகனங்களில் முழு கொள்ளளவு பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வெப்பநிலை அதிகரித்து வரும் காலங்களில் வாகனங்களில் முழுவதுமாக பெட்ரோல் நிரப்பாதீர்கள். அப்படி நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடும் எனவே பாதி அளவு பெட்ரோல் நிரப்பி மீதமுள்ள இடங்களில் காற்று இருக்கும் வகையில் விட்டுவிடுங்கள் என வதந்திகள் பரவி வருகிறது. இது தொடர்பான விளக்கத்தை இந்திய ஆயில் நிறுவனம் அளிக்க விரும்புகிறது. அந்தவகையில் […]
