Categories
தேசிய செய்திகள்

டெல்லி: “குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிரான வழக்கு”… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!

ஹர்ஷித் கோயல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் அடிப்படை உரிமைகளுக்கும், அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. ஆகவே சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பொதுநல மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Categories
தேசிய செய்திகள்

18 முதல் 59 வயதுடையோருக்கு இலவசம்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தலைநகரில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக கோவின் இணையத்தளத்தின் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் […]

Categories
அரசியல்

வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி அளிக்க வேலையின்மை உதவித்தொகையை டெல்லி மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லியை சேர்ந்த இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 7,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்தப் பதிவு மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டு போட்டிக்கு நீங்க ரெடியா?…. ரூ.1 லட்சம் பரிசு…. உடனே கிளம்புங்க…!!!!

டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் 15 நிமிடத்தில் 35 மோமோஸ் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது வாந்தி எடுக்கக் கூடாது, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும். 35 மோமோஸ்-க்கும் கட்டணம் செலுத்திவிட்டு தான் சாப்பிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட யூடியூபர் “ஃபுட்டி விஷால்” 35 மோமோஸ்களையும் சாப்பிட்டு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றுள்ளார். போட்டிக்கு நீங்க ரெடியா?. அப்போ உடனே […]

Categories
தேசிய செய்திகள்

கொளுத்தும் கோடை வெப்பம்…. மின் தேவை அதிகரிப்பு… வெளியான தகவல்…!!!!!

டில்லியில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருதனால்  மின் தேவையும் அதிகரித்து வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்., மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டில்லியில் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக டில்லியில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் டில்லியில் கடந்த ஏப்.,1 […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியின் அடுத்த தலைமைச் செயலாளர்…. யார் தெரியுமா…?

டெல்லியின் தலைமைச் செயலாராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தலைமைச் செயலாளர் பணி  புரிந்த விஜய் தேவ் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, டெல்லியின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் வருகின்ற 21 ஆம் தேதி அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நரேஷ் குமார், அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் அவரை டெல்லிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் டிரைவர்கள் வேலை நிறுத்தம்…. பொதுமக்கள் அவதி…!!!!!!

வாகனங்களுக்கான எரிவாயு (சி.என்.ஜி.) விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அதற்கு மானியம் வழங்க வேண்டும், வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அதேநேரம், ஓலா, உபர் போன்ற  செயலி சார்ந்த வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆட்டோ, மஞ்சள்-கருப்பு டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்து நேற்று ஆட்டோ, டாக்சிகளை இயக்கியுள்ளனர். இதனால் டெல்லி மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அதேநேரம், […]

Categories
தேசிய செய்திகள்

“மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவு நிஜமாகும்”… கவுரவ் பாட்டியா பேச்சு…..!!!!!

பா.ஜ.க மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது “கடந்த 2014ஆம் வருடம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக 2021-2026ஆம் வருடங்களில் கிராமங்களுக்காக ரூபாய் 7,192 கோடியும், நகரங்களுக்காக ரூபாய் 1,41,678 கோடியும் செலவிடப்பட இருக்கிறது. இதன் வாயிலாக நாடு முழுதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. மேலும் இந்த திட்டத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அக்னிஹோத்ரியின் அடுத்த படம்…. தமிழ்நாட்டின் உண்மைகளும் இருக்கும்… வெளியான தகவல்…!!!!!!!

காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையமாக வைத்து சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்ற படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய இப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுபம் கேர் நடித்திருந்தார். இப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்தது, இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் குழு மீண்டும் அடுத்த படத்தில் இணைவதாக அறிவித்தது. இந்நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்த […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன்

BREAKING : வீரருக்கு கொரோனா….. நாளைய ஐபிஎல் போட்டி இடமாற்றம்….!!!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்-ரவுண்டர். இதனையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டது. நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கோர முகம் காட்டும் கொரோனா…. இது தான் ஒரே வழி…. நிபுணர்கள் சொன்ன கருத்து….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கைவிட்டது தான் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: அனுமன் ஜெயந்தி ஊர்வலம்…. காவல் துறைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தல்…!!!!!

டெல்லி காவல் துறையினருக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். மேலும் இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய  உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.  அப்போது தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வன்முறை பற்றி  விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  […]

Categories
தேசிய செய்திகள்

“அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் மோதல்”…. மத்திய உள்துறை மந்திரி அதிரடி உத்தரவு…..!!!!!

டெல்லியிலுள்ள ஜஹாங்கீர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருபிரிவினர் இடையே தகராறு நிலவியபோது பலபேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய  உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க 10பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தேசிய தலைநகரில் நடைபெற்ற வன்முறை மற்றும் கல்வீச்சு […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி…. அரசு வெளியிட்ட அறிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அமலாகுமா முழு ஊரடங்கு?…. அதிகாரிகளின் ஆலோசனை…..!!!!!

உலகம் முழுவதும் சென்ற 2 வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல்வேறு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என விதிக்கப்பட்டு மக்களை பொதுயிடங்களில் நடமாடவிடாமல் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் பொதுயிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. பள்ளிகள் அனைத்தும் மூடல்?….. அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு… மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்த இளம் பெண்…. பதைபதைக்கும் வீடியோ…!!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம்மெட்ரோ  ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதி. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை 25 வயதான பெண் ஒருவர் மெட்ரோ நிலையத்தின் மீது ஏறி குதிக்கப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனை கண்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அந்த பெண்ணை கீழே இறங்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும், அந்த பெண் இறங்க மறுத்து, நான் குதிக்க போவதாக சைகை காட்டி சுவற்றின் விளிம்பில் நின்றுகொண்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார். Saving Lives…Prompt […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வெடித்து தீ விபத்து….! 13 பேர் படுகாயம்…. டெல்லியில் பயங்கரம்…!!!!

தென் கிழக்கு டெல்லியில் ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 13பேர் படுகாயம் அடைந்தனர். தென்கிழக்கு டெல்லியின் ஜாமியா பகுதியில் அமைந்துள்ள துரித உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலிண்டர் வெடித்ததில் கடை முற்றிலும் எரிந்துள்ள நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்….. பல்கலைக்கழகத்தில் பயங்கரம்….!!!!

டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள்.  மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தராக அறிவித்தது. இது போதாது என்று பாஜக கட்சியின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பின் ஏபிவிபி சேர்ந்தவர்கள் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த 2020ம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மாநில அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

டெல்லியில் சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் காற்று மாசு எப்போதும்  அதிகரித்து காணப்படும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் புறநகர் பகுதிகளில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்…. மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை…. அரசு தகவல்….!!!

டெல்லி அரசு காற்று மாசுபடுவதை கணிசமாக குறைப்பதற்காக மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. டெல்லியில் புதிதாக பதிவாகும் வாகனங்களில் மூன்றில் இரு பங்கு இருசக்கர வாகனமாக உள்ளது. காற்று மாசுபடுவதை கணிசமாக குறைப்பதற்காக அம்மாநிலம் மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. டெல்லி அரசிடம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் துறையின் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களை தவணை முறையில் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக டெல்லி அரசு சி.இ.எஸ்.எல். […]

Categories
தேசிய செய்திகள்

இ-சைக்கிள் வாங்க மானியம்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

டெல்லியில் இ-சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு 5,500ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் 1000 பேருக்கு 2000 ரூபாய் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கூறுகையில், டெல்லியில் இ சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு தலா 5,500 மானியமாக வழங்கப்படும். அதில் முதல் 1000 பேருக்கு 2000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. மேலும் வர்த்தக பயன்பாட்டிற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் திடீர் டெல்லி விசிட்…. தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மற்றும் கூட்டுறவு திருத்த சட்ட மசோதா ஆகியவை நிலுவையில் உள்ளதால் கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மக்களவையில் திமுக […]

Categories
தேசிய செய்திகள்

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”…. முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு திமுகவினர் அதிர்ச்சி…!!!!

தமிழகத்தின் உரிமைக்காகவே தலைநகர் டெல்லிக்கு சென்று உள்ளேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் இன் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணமகன் வினோத்குமார், மணமகள் ரேவதிக்கு அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து….!! குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி…!!

டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் குஜராத் வருகை தர உள்ளனர். கடந்த 1995ஆம் ஆண்டு முதல் குஜராத் பாஜக வசம் உள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக முதல்வர் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடுவது பெருமை…. அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி….!!!

டெல்லி அரசு பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிடுவது பெருமையாக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து இன்று டெல்லியில் உள்ள மாதிரி பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் பார்வையிட்டார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்” டெல்லி நகரில் உள்ள ராஜ் கியா சர்வோதயா மாதிரி பள்ளிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இன்று முதல் அபராதம் ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது . தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான முடிவை டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் அனைவருக்கும் 2000 ரூபாய் அபராதத் தொகை 500 ரூபாயாக குறைக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக நட்பை பலப்படுத்த…. இந்தியாவிற்கு வரும் ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதால் இந்தியாவுடன் வர்த்தக நட்பை பலப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், ஆசியாவிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அவர் இன்று டெல்லிக்கு வருகை தர உள்ளார். இதற்கிடையில் உக்ரைன் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்… இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு…. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!

ஆம் ஆத்மி அரசின் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ளது. டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி அரசு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் என்ற முழக்கத்தினை முன்வைத்து வருகிறது. மேலும் இந்த முழக்கத்தின் மூலமே அண்டை மாநிலமான பஞ்சாபிலும் இந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 17-வயது சிறுவன் சடலம்….சூட்கேசில் கண்டெடுப்பு…பெரும் பரபரப்பு…!!!

சிறுவன் ஒருவனின் சடலம் சூட்கேசுக்குள் வைக்கப்பட்டு டெல்லியில் ஒரு பகுதியில் கிடந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை மன்கோல்புரி என்ற பகுதியில் உள்ள பீர் பாபா பஜார் பகுதியில் சூட்கேஸ் ஒன்று சந்தேகப்படும்படியாக கேட்பாரற்று கிடந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

என் குழந்தைய காணல…. வீட்டில் நடந்த சோதனை…. அதிர்ந்து போன போலீஸ்….!!

டெல்லியில் உள்ள சிராக் டில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் டிம்பிள். இவர்  சில நாட்களுக்கு முன்பு பிறந்து 2 மாதங்களே ஆன தனது பெண் குழந்தை காணாமல் போனதாக புகாரளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் வீட்டிற்கு வந்தபோது குழந்தையை மைக்ரோ ஓவனில் காண்டெடுத்து  விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும், புகார் அளிப்பதற்கு முன்பே குழந்தை இறந்துள்ளதும்  […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீண்டும் தொடங்கும் விமான சேவை…எப்போது தெரியுமா ..?

திருச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக புதுடெல்லிக்கு மீண்டும் விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு ஐதராபாத் வழியாக இண்டிகோ விமானம் இயக்கப்பட்டிருந்தது.  கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த விமான சேவை மீண்டும் வருகிற 27-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்த விமானம் தினந்தோறும் காலை 9.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10.55 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தை வந்தடைகிறது. மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லி போகும் முதல்வர் ஸ்டாலின்…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறது. அதனை திறந்து வைப்பதற்காக தமிழக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லி செல்ல இருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த பயணத்தின்போது தேசியக் கட்சிகளின் முக்கியமான தலைவர்களை அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் 3- வது டெல்லி பயணம் இது ஆகும். டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகம் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ…. கோர விபத்தில் பறிபோன 7 உயிர்…. தலைநகரில் பரபரப்பு…..!!!!!

டெல்லியின் கோகுல்புரி பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இந்நிலையில் விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து ஏறக்குறைய 13 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பல்வேறு போராட்டத்திற்கு பின் அதிகாலை சுமார் 4 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியது. மேலும் விபத்தில் 7 பேர் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி முனையில் காரை கடத்திய கும்பல்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!

கார் ஓட்டுநரை மிரட்டி காரை கடத்தி சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ரங்க பூரியை சேர்ந்த சச்சின்(29) ,மனோஜ்(27) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த விசாரணையில் வாடிக்கையாளர்களை போல் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி கார் ஓட்டுனரை மிரட்டி காரை கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

மாமனார் வீட்டில் வசிக்க…. மருமகளுக்கு உரிமை இல்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மாமியார், மாமனாருடன் கூட்டுக்குடும்பத்தில் வாழ மருமகளுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணவரின் தந்தைக்கு சொந்தமான வீட்டில் இவர்கள் கூட்டுக் குடித்தனம் நடத்தி வந்தனர். இருவரின் மோதலுக்கு பிறகு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழப் பிடிக்காத கணவர் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மருமகள் தனக்கு அந்த […]

Categories
உலக செய்திகள்

ஹங்கேரியிலிருந்து புறப்பட்ட 6-ஆவது சிறப்பு விமானம்… உக்ரைனிலிருந்து 240 இந்தியர்கள் மீட்பு…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 1156 இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன் திணறி வருகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக உக்ரைனில் தங்கியிருந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! இனி முகக்கவசம் அணிய தேவையில்லை…. மாநில அரசு அறிவிப்பு….!!!

கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் உலகில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முகக்கவசம் அணிவதற்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் கொரோனா பரவல் சங்கிலியை முகக்கவசம் மூலம் உடைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவை இல்லை என […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைன் வகுப்பு கிடையாது…. ஏப்-1 முதல் ஸ்கூல் ஓபன்…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் ஏப்ரல் 1 முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவின் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் தாக்கம், கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் மூலம் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கிருந்து போ டா” பூங்கா சென்ற தம்பதிக்கு…. நேர்ந்த கொடூர சம்பவம்…!!!!

அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் வழிப்பறி செய்யும் ஒருவர் பணம் பறித்துவிட்டு கத்தியால் தாக்கி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் டெல்லியில் மோமோ என்ற உணவுப் பண்டத்தை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.அப்போது இரவு 10 மணி அளவில் தனது மனைவியுடன் பூங்காவில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு தடை…!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…!!

டெல்லியில்  10 மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில்  உள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை  […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்த பையில் வெடிகுண்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

வீட்டில் இருந்த பையில் வெடிகுண்டு இருந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், பழைய சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியாக பை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பையில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“இன்று பள்ளிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை”…. மாநில முதல்வர் போட்ட அதிரடி அறிவிப்பு….!!!

குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில்  அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 16) விடுமுறை அறிவிப்பு என  அம்மாநில முதல்வர்  தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று (பிப்ரவரி 16) குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டதாவது “சந்த் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி மகராஜின் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 87 வயது மூதாட்டிக்கு நடந்த சோகம்…. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

87 வயது மூதாட்டியை மர்மநபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.   டெல்லியில் உள்ள திலக் நகரில் 87 வயது மூதாட்டி ஒருவர் தனது 65 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  மதியம் 12.30 மணி அளவில் அவரது மகள் வெளியே சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த கைப்பேசியையும் திருடி சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் திறப்பு…. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி…. முக்கிய அறிவிப்பு…!!!!

டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று  முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தோட்ட விழாவையொட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பலவித வண்ண மலர்களைக் கொண்ட இந்த  தோட்டத்தில் 11 வகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றை தூய்மைப்படுத்தி கூடிய தாவரங்களும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வருடந்தோறும் இந்த மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது […]

Categories
தேசிய செய்திகள்

சிற்றுண்டியில் இனி சமோசா தயாரிக்கப்படாது – மத்திய சுகாதார அமைச்சகம்..!!

டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிற்றுண்டியில் இனி சமோசா தயாரிக்கப்  படாது என்றும், ஆரோக்கியமான சத்தான உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்மன் பவன் அலுவலக சிற்றுண்டியில் சமோசா உள்ளிட்ட வறுத்த உணவு பொருட்கள் தயாரிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“தனியார் மயமாகும் வங்கிகள்”…. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த முடிவு எதுவும்  எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பகவத் காரத்  தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் மத்திய அமைச்சர் பகவத் கராத் நேற்று  கூறியதாவது; “வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து எந்த முடிவும் இன்னும்  எடுக்கப்படவில்லை.  முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் அடிப்படையில் கிடைத்த சில தகவல்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இது தொடர்பாக வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…! இப்படியெல்லாமா பண்ணுவாங்க…. “துப்பாக்கி முனையில் மாணவனை மிரட்டி”…. பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியில் கல்லூரி மாணவனை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.  தெற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த மாணவருடன் 3 பேர் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி அன்று அந்த மாணவர்களிடம் நாசுக்காக பேசி அந்த நபர்கள் மாணவனை கடத்தி அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின்… முதல் பெண் துணை வேந்தர்…! இவர் யார் தெரியுமா..??

டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்தி ஸ்ரீ துலிப்புடி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் சாவித்ரி பாய் புலே  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரியும் சாந்திஸ்ரீ துலிப்புடி என்பவர் சர்வதேச உறவுகள் குறித்த படிப்பில் எம்.பில். பி.எச்.டி. படித்து முடித்துள்ளார். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நேரு பல்கலைக்கழகத்தில் முதல் பெண் துணைவேந்தராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவரது  நியமனத்திற்கு ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. 2 வகையான வகுப்புக்கு அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!!

டெல்லியில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் டெல்லியிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 7(இன்று) முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும் பள்ளி நிர்வாகம் நேரடி […]

Categories

Tech |