மத வித்தியாசமின்றி டெல்லியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே […]
