டெல்லி பல்கலைகழகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டப்படிப்பு முடிக்காத மாணவர்கள் அதை நிறைவுசெய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் விதமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் படிப்பை கைவிட்டவர்கள், தொடர முடியாதவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திகொண்டு ராஜேஷ்குமார் ராவத் (வயது 70) என்பவர் முதுநிலைக்கான சட்டபடிப்பில் படிக்க விண்ணப்பித்துள்ளார். அவர் 42 வருடங்களுக்கு முன்பு லக்னோவில் எல்.எல்.பி. எனப்படும் இளநிலை சட்டப்படிப்பு முடித்ததும், சி.பி.ஐ.யில் பணியில் சேர்ந்து இருக்கிறார். இதையடுத்து டெல்லிக்கு […]
