நேற்று டெல்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹைட்ராலிக் கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக பழுதடைந்து நின்றது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது என்றும், குருகிராமில் உள்ள ஹோண்டா கௌக்கில் இருந்து மஹிபால்பூர் சென்றடைய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது என்றும் இயந்திரவியல் பொறியளர் ஒருவர் கூறியுள்ளார்.
