டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]
