டெம்போ ஓட்டுனரை கல்லால் அடித்துக்கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் டெம்போ ஓட்டுனரான செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்குமார் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி செந்தில்குமார் அவரது வீட்டில் கல்லால் தாக்கப்பட்டு […]
