ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலக்குறிச்சி சாஸ்தாகோவில் தெருவில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவியின் ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்புவதற்காக திருவனந்தபுரம்- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தலைமை தபால் நிலையம் பகுதியில் சென்றபோது எதிரே தூத்துக்குடியிலிருந்து பாமாயில் […]
