அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]
