தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]
