உலக சுகாதார அமைப்பு வியூகிக்கும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கையாண்டாலே கொரோனா நடப்பாண்டில் முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று அந்த நிறுவனத்தின்ப் தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. மேலும் பல உருமாற்றங்களை பெற்ற கொரோனா சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரானாக மாறியுள்ளது. இந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு பரவி கொரோனாவின் 3 ஆவது அலையை வீசத் தொடங்கியுள்ளது. […]
