உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ […]
