தமிழகத்தில் திடீர் என ஏற்பட்ட டீசல் தட்டுப்பாடு காரணமாக வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் பாதிப்படைந்துள்ளனர். வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாகவே எண்ணெய் நிறுவனங்கள் பங்க்குகளுக்கு குறைந்த அளவில் டீசல் விநியோகம் செய்து வருவதால் தமிழகத்தில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 […]
