பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக இந்தியாவிடம் 3,600 கோடி ரூபாயை இலங்கை கடனாக கேட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெயை மத்தியகிழக்கு நாடுகளில் இருந்தும், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இலங்கை இறக்குமதி செய்து வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட பணம் செலுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. […]
