இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்குரிய பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில் இருந்தே சஞ்சய் சூட் என்பவர் பிரபலமாகி உள்ளார். இதில் சஞ்சய் சூட்(57) சிம்லாவில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். சிம்லா நகர்ப்புற தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் பரத்வாஜ்க்குப் பதில் சஞ்சய் சூட்டை நிறுத்த பா.ஜ.க முடிவுசெய்துள்ளது. தற்போது சஞ்சய் சூட் சிம்லா நகர்ப்புறத்தில் வசிப்பவர் ஆவார். இவர் கடந்த 2007ல் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார். […]
