டீக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் திடீரென செல்வராஜ் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
