இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் மகனும் நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முகத்தன்மை கொண்டவர். இந்த நிலையில் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தரை நேரில் சென்று முதல்வர் நலம் விசாரித்தார். இதன்பின் […]
