நாவல் ஆசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன்(63) நேற்றிரவு காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர் நேற்றிரவு இறந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழகம் மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தின்போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார். கவிதைகள், பயணக் கட்டுரைகள், நாவல்களை எழுதியிருக்கும் டி.பி.ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவர் எழுதிய “பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை” நாவல் அதே பெயரில் […]
