சாலை விபத்துக்களை தடுப்பதற்கு குழந்தைகளே பெற்றோருக்கு ஹெல்மெட் அணிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை காவல்துறையினர் எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியபோது, தமிழகத்தில் 2021-ல் 55 ஆயிரம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 14 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர், 25 ஆயிரம் பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். தற்போது வாகன ஓட்டிகளிடம் பொறுப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியுங்கள் என்று காவல்துறையினர் கூறினாலும் […]
