கர்நாடகா மாநிலத்தில் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல் மந்திரியாகயிருந்த சித்தராமையா, வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனிமத அந்தஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்துகொண்டது பற்றி நான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தேன். எந்தஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்ககூடாது என்பது என் கருத்தாகும். வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது தொடர்பாக […]
