உடல்நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ள சூழ்நிலையில், அவருடைய விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். உடல் நலன் காரணமாக அவர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர்த்து, பாஜக-வில் இணையபோகிறேன் என கூறவில்லை. பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை எனவும் டி.கே.எஸ். விமர்சனம் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “திமுக சட்டதிட்டத்தின்படி துணை […]
