2004ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அண்மையில் அந்த அணியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு பிரிவு உபசார விழாவில், மனமுடைந்து பேசிய மெஸ்ஸி அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கையில் டிஷ்யூ பேப்பரை வைத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். இந்நிலையில் மெஸ்ஸி துடைத்துப் போட்ட டிஷ்யூ பேப்பரை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று அதில் மெஸ்ஸியின் டிஎன்ஏ இருப்பதாகவும்,அதைக் கொண்டு அவரைப் போன்ற திறமை வாய்ந்த இன்னொரு கால்பந்து வீரரை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் […]
