டிரைவர் வீட்டில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்ஜோதி அவரது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், கம்மல், வளையல், மோதிரம் உள்பட 6 1\2 […]
