பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்தை குடித்து டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் குருவய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பஸ் டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி குருவய்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதன் மறுநாளும் டிரைவர் பற்றாக்குறையால் குருவய்யா பேருந்தை இயக்கியுள்ளார். அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்ற குருவய்யாவை அதிகாரி சிறப்புப் பேருந்து இயக்க […]
