ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியில் செந்தூரப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வள்ளி(48). இந்நிலையில் வள்ளி கடலாடி அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்த சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதிவழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியுள்ளது. இதனையடுத்து விபத்தில் பலத்தகாயம் அடைந்த வள்ளியை கடலாடி […]
