டிரைவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்ப்பாதநல்லூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான எழிலரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் அப்பகுதியில் அவருடைய நண்பரான முருகன் மற்றும் தமிழரசனுடன் புஷ்பகிரி குளக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எழிலரசன் போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து எழிலரசனின் நண்பர்கள் அவரின் […]
