டிரைவரை தாக்கி பணம் பறித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ரிஷியூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலையரசன் தனக்கு சொந்தமான மினி லாரியில் நீடாமங்கலம் கடைவீதிக்கு வந்துள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மினி லாரியின் பின்னால் காரில் வந்து கொண்டிருந்த சர்வமான்யம் கிராமத்தில் வசிக்கும் ராஜமூர்த்தி என்பவர் காருக்கு வழிவிடும்படி ஹாரன் அடித்துள்ளார். இதனால் இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி கலையரசனை கத்தியால் […]
