இளையான்குடி அருகே டிரைவரின் கவனக்குறைவால் வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சந்தனூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருக்கிறார். அந்த ஊரில் கருப்பண்ணசாமி கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு மாசி திருவிழா நடைபெறவிருப்பதால் கருப்பையாவும், அந்த ஊர் மக்களும் ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி கோவில் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக கருப்பையா மானாமதுரை அன்பு நகரில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருடைய வாடகை வேனில் 27 […]
