போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கீழபூசணூத்து அருகே உள்ள அல்லால் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தது அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து […]
