பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க வலியுறுத்தி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாலக்கோம்பை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் 2 டிராக்டர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று மணல் அள்ளிய 2 டிராக்டர் டிரைவர் மீது வழக்குபதிவு செய்து, மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அறிந்த […]
