அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளிப்போட விருப்பமில்லை ஆனால் நியாயமாக நடத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தல் களமானது தற்போது சூடு பிடித்திருக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சியினர் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடவுள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்து இருப்பதால், அந்நாட்டில் தேர்தல் நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. […]
