மெக்சிகோவில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 54 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரக், மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் ஆபத்தான வளைவில் திரும்பியபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 54 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். […]
