டிப்ளமோ நர்சிங் DGNM படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,000- க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
