திண்டுக்கல்லில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் வேன் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் மதுரைக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் உணவகத்திற்கு சொந்தமான சரக்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். இவருடன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் ஜாய்சிங் என்பவரும் வேனில் சென்றுள்ளார். அப்போது வேன் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் […]
