Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்முறையில் எப்போதும் நம்பிக்கை இல்லை…. டிடிவி தினகரன் கருத்து….!!!

வன்முறையில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமில்லாமல் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக தாக்குதல் நடத்தியதா…? குண்டர்களை ஏவி தாக்கியது ஈபிஎஸ் தரப்பு…. டிடிவி காட்டம்…!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதன்படி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எது உண்மை….? தமிழக ஆளுநரை முதல்வர் சந்தித்து எதைப் பற்றி பேசினார்….? டிடிவி தினகரன் கேள்வி….!!!

தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்ற உண்மை தெரிய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: ‘காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது’…? டி.டி.வி.தினகரன் ட்வீட்…!!!

காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? என்று டிடிவி தினகரன் டுவிட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்த கொடுமைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”… டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு நிகழும் இத்தகைய கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கோவையில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு வேணும்னா எடப்பாடி பெரிய ஆளு…. எனக்கில்லை என அசால்ட் கொடுத்த டிடிவி …!!

.செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  ஓபிஎஸ் உடைய தம்பி ராஜாவை நானே மேடையில் தான் பார்த்தேன், அவர்கள் எல்லாம் பழைய பழக்கம், என்னுடைய சம்மந்தி திரு வாண்டையார் அவருக்கு நல்ல நண்பர், அவர் பத்திரிக்கை கொடுத்து இருக்கிறார், அதனால் வந்திருக்கிறாரு. சின்னம்மா  பொதுச்செயலாளர்  என்று சொல்கிறார்களே என்று சொன்னதற்கு, அவுங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அப்படி என்று சொல்கிறார்களே தவிர…. ஒரு சமயம் ஆட்சி அதிகாரம் கொடுத்தவர்களை பற்றி சொல்வதற்கே…  ஒரு தாய் ஸ்தானத்தில் உள்ளவர்களை பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பலவீனமாக இருக்கிறார்… வம்பிழுக்கும் டிடிவி…. கோபத்தில் அதிமுக ..!!

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் அடிபடுது, மறுவிசாரணை நடத்துகின்றார்கள் என்ற கேள்விக்கு,  நான் அன்றைக்கே சொனேனே, ஒருத்தருக்கு மடியில் கனமில்லை என்றால், பயப்பட வேண்டிய அவசியமில்லை, பதறவேண்டிய அவசியம் இல்லை, அவ்வளவு தான். அவருக்கு மடியில் கனமில்லை என்றால் அவரு பதறவேண்டாம் என்று சொல்கிறேன். நான் இருக்கு என்று நினைப்பதற்கு நான் என்ன போலீசா ?  கோர்ட்டா ? எடப்பாடி பலவீனமாக இருக்கிறார் என்று சொல்கிறேன், அரசியல் ரீதியாக… நீங்க தான கேட்டீங்க ஒருங்கிணைப்பாளர், இணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாலு கால் பிராணி மாதிரி…. தவழ்ந்ததை யாரும் மறக்க முடியுமா ? இபிஎஸ்ஸை கடுப்பாகிய டிடிவி …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வமே சசிகலாவை ஏற்றுக்கொண்டார், ஆனால் முதல்வராக்கிய  எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிராக நிற்கிறார் என்ற கேள்விக்கு,  பதிலளித்த அவர், அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கனும். நான் என்ன பதில் சொல்வது ?   யாரும் மறுக்க முடியாது… அவர்கள் வந்து தவழ்ந்து…  நாலு கால் பிராணி மாதிரி வந்ததை யாருமே மறக்க முடியாது ? அவர் அப்படி பேசுகிறார் என்றால் யாரிடம் தவறு இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும், இது உலகத்துக்கே தெரிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! எப்படிலாம் யோசிக்கிறீங்க ? இதுக்குலாம் பதில் சொல்லல… டிடிவி பளார் பேட்டி …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம்,  அமமுக தொடங்கப்பட்டது அதிமுகவை மீட்டெடுப்பது என்பதற்காக தான். இப்போ நடக்கின்ற சூழ்நிலையை பார்க்கும்போது விரைவில் ஒரு இணைப்பு சத்தியமாக உள்ளதா என்று உங்களுக்கு தெரிகிறதா என செய்தியாளர் கேட்டதற்கு, நானும் ஊடகங்களில் தான்  பல செய்திகளை பார்க்கிறேன். எனக்கு இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா ?  யார்யாரோ எனென்னமோ எழுதுறாங்க, அதை தவறு என்று கூறவில்லை அது அவர்களுடைய சுதந்திரம் , அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது இல்லை என்பது எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவியை அடிச்சு துரத்துனாங்க…! சொல்லுற ஏதும் நடக்காது…. பழமொழி சொன்ன ஜெயக்குமார் ..!!

டிடிவி தினகரன் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பழமொழி உண்டு… முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகிற கதையாக தான் இந்த கதை இருக்கும். கண்டிப்பாக இது நடக்காத விஷயம். அண்ணா திமுக பொருத்தவரை பெரிய அளவிற்கு ஒரு ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இன்றைக்கு வெற்றிநடை போட்டு இருக்கு, வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை ஒரு சாதாரண  தினகரன் போன்றவர்களெல்லாம் இன்றைக்கு கட்சிக்கு சம்பந்தமில்லை, கட்சிக்கும் அவருக்கும்  என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல அது என்னோட சித்தி…! எங்க இலக்கு ஒன்னு தான்…. டிடிவி பேட்டியால் நடுங்கும் அதிமுக ….!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவை மீட்க  இணைந்து  போராடவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? என்று கேட்ட டிடிவி தினகரனிடம், அதற்க்கு சசிகலா உங்களுக்கு ஆதரவாக இருப்பார்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்க்கு  இதை அவர்களிடம் கேட்க வேண்டும், எங்க சித்தி ஆதரவாக இருக்காங்க என்று நான் சொல்வது எப்படி ? உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், உலகறிந்த விஷயம் தான். இதைப்போய் நான் சொல்லித்தான் தெரியனுமா ? அப்போ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதையும் நம்ம முதல்வரு வேடிக்கைதான் பார்ப்பாரா…? பொங்கி எழுந்த டிடிவி தினகரன்…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் […]

Categories
மாவட்ட செய்திகள்

“அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும்.”…. ஓ.பன்னீர்செல்வம் குறித்த டிடிவி தினகரன் பேச்சு….!!

ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக சிந்தித்து பேசக்கூடியவர் மேலும் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். நேற்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, அமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் இந்த தோல்வி அவர்களை சோர்வடைய செய்யவில்லை எனவும் மேலும் உத்வேகத்துடன் அமமுக தொண்டர்கள் செயல்படுவார் எனவும் […]

Categories
அரசியல்

தவணைக் காலத்தில் ஆட்சி செய்யும் ஸ்டாலின்… டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய ஆட்சி செயல்பாடு என்பது ஆறுமாதம் தவணை காலம் போன்றது என்று விமர்சித்தார். ஈபிஎஸ் நான்கு கால் பிராணி போல் தவழ்ந்ததை அனைவரும் அறிவர். யாரால் முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். கொடநாடு கொலை வழக்கில் ஈபிஎஸ் மடியில் […]

Categories
அரசியல்

EPS-ஐ டம்மியாக்கி… OPS-ஐ தூக்கிபிடிக்கும் டிடிவி தினகரன்… !!!!

மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது திமுக தான் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஓபிஎஸ் எதையும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார். அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா சட்டரீதியாக […]

Categories
அரசியல்

“அதிமுகவில் சசிகலா” ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்…. ஓபிஎஸ் சொன்னதுதான் சரி…. டிடிவி தினகரன் கருத்து….!!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரியான கருத்து என்று கூறினார். டிடிவி தினகரன் மேலும் கூறியதாவது, “எப்பொழுதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?… “ஓபிஎஸ் சொன்னது சரி தான்”…. டிடிவி தினகரன் பேட்டி!!

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தை கூறியிருப்பதாக  டிடிவி தினகரன் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்.. “அமமுகவிற்கு குக்கர் சின்னம்”… மகிழ்ச்சியில் தொண்டர்கள்!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் உயர்வு….? டி.டி.வி.தினகரன் கேள்வி…!!!

சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு […]

Categories
மாநில செய்திகள்

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்… டிடிவி தினகரன்… ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: டிடிவி தினகரனுக்கு திடீர் தடை… சசிகலா அதிரடி….!!!!!

அமமுக கட்சியில் செயல்பட டிடிவி தினகரனுக்கு சசிகலா திடீர் தடை விதித்தது தகவல் வெளியாகியுள்ளது. அமமுக கட்சியில் இருந்து தொண்டர்கள் திமுக மற்றும் அதிமுகவின் தொடர்ந்து இணைந்து வருவதால் கட்சி நடவடிக்கைகளிலிருந்து டிடிவி தினகரன் ஒதுங்கி இருக்கும் படியும், கட்சியை தானே பார்த்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கடிதம் எழுதுவது மட்டுமல்லாமல்…. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் -டிடிவி தினகரன்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரி உயிரிழப்பு… முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்… டிடிவி தினகரன் கருத்து…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன் சேலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்… டிடிவி தினகரன் வேண்டுகோள்…!!!

திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்ததால் படிப்படியாக தளர்வுகளை அறிவித்துக் கொண்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்…. டிடிவி தினகரன் வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில் 2 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு முழு விலையை வழங்கு…. டிடிவி தினகரன் வேண்டுகோள்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

லாரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்… டிடிவி தினகரன் கோரிக்கை…!!

கொரோனா தாக்கத்தால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி […]

Categories
மாநில செய்திகள்

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தினம்…. டிடிவி தினகரன் அஞ்சலி….!!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.  இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாள் என்பதால்  தமிழக அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சர்வதேச செவிலியர் தினம்…. டிடிவி தினகரன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்….!!!!

செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 அன்று ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் சுமார் 3 கோடி செவிலியர்கள் உள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 60,000 பேர் செவிலியர் பயிற்சி முடிக்கின்றனர். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக முன் நின்று போராடும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள். இதனையடுத்து மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பொருட்கள் வாங்குவதற்காக…. கடைகளில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும்…. டிடிவி தினகரன்…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பேரிடரில் பொறுப்பேற்கும்…. ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு […]

Categories
மாநில செய்திகள்

பொறுப்பை ஏற்பதற்கு முன்பே…. அராஜகத்தை ஆரம்பித்த தி.மு.க….. டிடிவி தினகரன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

எல்.முருகன் முன்னிலை தினகரன் பின்னடைவு…. தொடரும் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

சிறு கவனப்பிசகு கூட வெற்றியை சேதப்படுத்தும்…. டிடிவி தினகரன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் தொண்டர்கள் முழு கவனத்துடன், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு…. நடிகர் விவேக் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வாங்க விவேக்… டிடிவி தினகரன் ட்விட்..!!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

நீர்,மோர் பந்தல்களை அமைக்க… டிடிவி தினகரன் வேண்டுகோள்…!!!

தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல்களை அமைக்க தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் தண்ணீருக்காக அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. மனிதர்களாகிய நாம்தான் மற்ற உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் வெயில் தாங்க முடியாமல் பல பறவைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் நாம் அனைவரும் வெயில் காலத்தில் பறவைகள் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம். இந்நிலையில் கோடை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தோல்வி பயம்…. 10கோடி, 20கோடிக்கு வாங்கிட்டாங்க.. டிடிவி தினகரன் வேதனை..!

தமிழகம் முழுவதும் நேற்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பெரிய அளவில் மாற்றம் வரும், அரசியல் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். பெரிய அளவில் மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். மே 2ஆம் தேதி தெரிந்து விடும். அமமுக வெற்றி தமிழகம் முழுவதும் சிறப்பாக இருக்கு. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் ஆதரித்து, பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் ஆட்சிக்கு வரவிடாமல்  […]

Categories
மாநில செய்திகள்

50,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி உறுதி… டிடிவி தினகரன்…!!!

கோவில்பட்டியில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
மாநில செய்திகள்

நாளை பல சில்மிஷங்கள் நடக்கும்… கொஞ்சம் உஷாரா இருங்க… டிடிவி தினகரன்…!!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நிறைவடையும் வரை பல சில்மிஷங்கள் நடக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பணத்துடனே கூட்டணி வைத்துள்ளார்…. டிடிவி தினகரன் தாக்கு..!!

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது டி. டி. வி. தினகரன் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு யாருடனும் கூட்டணி இல்லை. பணத்துடன் மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகத்திற்கு தக்க பதிலடி மக்கள் கொடுக்கவேண்டும். திமுகவை சேர்ந்தவர்கள் கைகொடுப்பதுபோல் கையில் இருக்கும் மோதிரத்தை திருடி விடுவார்கள். பஜ்ஜி கடையில் பாக்சிங் செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பித்தலாட்டத்தை ஆரம்பித்த திமுக…. திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் விமர்சனம்..!!

தபால் ஓட்டுலேயே திமுக பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டது என அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் கடுமையாக விமர்சித்தார். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியாதாவது. தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

ஆளும் கட்சி தொகுதிக்கு தலா ரூ.50 கோடி…ரூ.100 கோடி… டிடிவி தினகரன் விமர்சனம்..!!

ஆளுங்கட்சியினர் மக்களை நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தொகுதி தொகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது ஆளும் கட்சி மக்களையும் தொண்டர்களையும் நம்பாமல் பணத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்று விமர்சித்தார். தொகுதிக்கு தலா 50 கோடி, 100 கோடியை […]

Categories
மாநில செய்திகள்

“பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது”… நாமக்கல்லில் டிடிவி தினகரன் பரப்புரை..!!

பணம் கொடுத்தாலும் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்று, அ.ம.மு.க., பொதுச் செயலாளா் தினகரன் கூறினார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வேட்பாளர்களை ஆதரித்து அமமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார்.  அப்போது தமிழக மக்கள் நலம் பெறவேண்டும், அடிப்படை வசதிகளை பெற வேண்டும் என்பதற்காக, அமமுக கூட்டணி அமைத்து இந்தத் தோ்தலை சந்திக்கிறது. கொரோனாவால், பொதுமக்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் சிறிய, பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதோடு, அரசு பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆா். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவை வீழ்த்தும் அமமுக – தேமுதிக கூட்டணி…. டிடிவி தினகரன் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்துவதே கட்சியின் நோக்கம் என்று டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகம் வெற்றி நடை போடவில்லை…. கடனில் தத்தளிக்கிறது”… டிடிவி தினகரன் கடும் விமர்சனம்….!!!

தமிழகம் வெற்றி நடை போட வில்லை, கடன் சுமையில் தத்தளிக்கிறது என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீரே இல்லாத நிலையில் வாஷிங் மெஷின் எதற்கு?…. டிடிவி தினகரன் அதிரடி கேள்வி…!!!

தமிழகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் வாஷிங் மெஷின் எதற்கு என்றே டிடிவி தினகரன் அதிரடிக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓட்டு வங்கி ஓட்டு வங்கினு சொல்லுறீங்க…! எல்லாருக்கும் அப்படியா கொடுத்தீங்க… ஒரே போடாக போட்ட தேமுதிக …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதும், டிடிவி. தினகரன் அவர்கள் தொடர்பு கொண்டு அவர்களுடன் கூட்டணி வரவேண்டும் என்று பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை நடந்தது சுமூகமாக முடிந்தது, 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருக்கிறது. 60 தொகுதிகலினுடைய வேட்பாளர் உடனடியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தேமுதிக – அமமுக கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்று ஒட்டுமொத்த மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு கூட்டணியாக இன்றைக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று […]

Categories
மாநில செய்திகள்

டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல்… வெளியான செய்தி..!!

டிடிவி தினகரன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக திமுக என்ற பெரும் கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சியினரும் போட்டி […]

Categories
அரசியல்

BREAKING: கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி… அதிரடி அறிவிப்பு…!!!

அமமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories

Tech |