Categories
மாநில செய்திகள்

BREAKING: டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்…. இது என்ன ட்விஸ்ட்டா இருக்கு?….. அடுத்து நடக்கப்போவது என்ன….????

தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய இபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் ஓபிஎஸ் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியோடு எனக்கு விரோதம் கிடையாது… MP தேர்தலில் கூட்டணி அமைப்போம்…. டிடிவி அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எல்லாம் நம்பி, தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு திமுக ஆட்சியை ஆதரிதாரிகள். ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற விதமாகத்தான் திமுக ஆட்சி செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கான பலனை அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனுபவிப்பார்கள். பாராளுமன்ற தேர்தல் என்பது இந்தியாவின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுக்கின்ற தேர்தல். அதுல ரெண்டே வாய்ப்பு தான் இருக்கு.  ஒன்னு பிஜேபி,  இன்னொன்னு காங்கிரஸ். அதனால 2023 […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இறைவனே நினைத்தாலும் EPS -யை காப்பாற்ற முடியாது – திருக்குறள் சொல்லி நச்சுனு பேசிய டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு,  புரட்சித் தலைவரின் சட்ட விதிகளின்  அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.அதுதான் உச்ச நீதிமன்றம் வரைக்கும் தொடரும். ஏனெற்றால் அது ஒரு சரியான தீர்ப்பு,  அதனால அது தான் தொடரும் என்று நான் எனக்கு தெரிஞ்ச சட்ட அனுபவத்துல சொல்றேன். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் சிறைக்கு போனும்னு எண்ணம் இல்லை. எடப்பாடி அவர்கள் திருந்தனும். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வரவேண்டும்….. மனோஜ் பாண்டியன்….!!!!

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்பதை தொண்டர்களின் விருப்பம் என அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.  விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.Mஆ கூட ஆகி இருப்பேன்…! ”ஜெ”யிடம் கூறிய டிடிவி… நெகிழ்ந்து போன தொண்டர்கள் ..!!

அமமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,  எனக்கு உண்மையிலேயே பதவி ஆசை இருந்தால், ஏற்கனவே 2001 இல் முதலமைச்சர் பதவி பெறக்கூடிய இடத்தில் நான் இருந்தவன், எனக்கு எப்பவுமே ஒரு சுபாவம். நாமாக போராடி, உழைத்து வெற்றி பெற்று தான் எந்த பதவிக்கும் செல்ல வேண்டும். இன்றைக்கு ஒன்றை சொல்கிறேன், அம்மா அவர்களிடம் நமக்கு இருந்த அந்த உறவிலே, நட்பிலே, நான் ராஜ்ஜியசபா எம்.பியாகவே ஆகி இருக்க முடியும். இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரக்கனாக இருக்கும் எடப்பாடி…! நேருல பார்த்தா பயந்துருவாரு… கெத்தாக பேசிய டிடிவி ..!!

அமமுக கட்சியின் பொதுக்குழுவில் பேசிய டிடிவி தினகரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி மூலம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை வீழ்த்த முடியும் என டெல்லியில் உள்ள என்னுடைய நலம் விரும்பிகள் என்னை கூட்டணிக்கு அழைத்தார்கள். நான் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது. அவர் முதல்வர் என்றால் நாங்களும் கூட்டணிக்கு வரவில்லை. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துங்கள் நாங்கள் கூட்டணிக்கு வருகின்றோம் என தெரிவித்தார். மேலும், நான் தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி கிட்ட இருக்கும் 10பேர்..! நிச்சயம் தண்டனை கிடைக்கும்… ADMKவை பதற வைத்த டிடிவி ..!!

அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தனிமனித வெறுப்பு எனக்கு யாரிடமும் கிடையாது.எடப்பாடி தவறானவர், துரோக சிந்தனை உள்ளவர், தனது சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக் கூடியவர், அந்த நபரோடு நீங்கள் பயணிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தவன் நான். அவருடன் இருக்கும் 10 பேரும் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லோரையும் எல்லா நாளும் நாம் ஏமாற்ற முடியாது, அதுவும் அம்மாவின் தொண்டர்களை, புரட்சித்தலைவியின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்ல.. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா… குறித்து ஜெயக்குமார் நக்கல் பதில் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக் கொள்ள  வாய்ப்பு இருக்கிறது என்று.. இது என்ன புதுசா ? ஆரம்பத்தில் இருந்தே இங்கே வந்து ஆட்சியில் பங்கு பெற்று, கிட்டதட்ட பல்லாண்டு காலம் நம்முடைய அம்மாவுடைய அரசில் அங்கம் வகித்து, பலா சோலை மாறி அனுபவித்து விட்டு, அப்பவே டிடிவி தினகரனை மறைமுகமாக பார்த்தவர். அதை அவரே ஒத்துக் கொண்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி திருந்தவே மாட்டார்… பதவி வெறிபுடித்து அழையுறாரு …. விளாசிய டிடிவி தினகரன் ..!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைக்கு செப்டம்பர் 12.2017-ல் பொதுச்செயலாளர் என்ற பதவி அம்மா அவர்களுக்கு மட்டும்தான், அதனால் வருங்காலத்தில் யாரும் கிடையாது என்று பொது குழுவில் கூடி முடிவெடுத்து விட்டு, இன்றைக்கு அம்மா அவர்களுக்கு துரோகம் செய்கின்ற விதமாக தலைமை பதவியில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, இன்றைக்கு நீதிமன்றத்திலே அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தது உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒற்றை தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSதவறை உணர்ந்து மாறிவிட்டார்…! EPSஇன்னும் மாறவில்லை… OKசொன்ன டிடிவி …!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு வேண்டுமானால் ஒரு 2500, 3000 பேர் பொறுப்பில் இருந்து கொண்டு இன்றைக்கு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வருங்காலம்… ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள், அம்மாவின் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட திட்டங்களையே மீறி விட்டார்கள். என்னிடம் நேர்கானலில் ஒருவர் கேட்டார், இதை  எதற்காக சொல்கிறேன் என்றால் ? சில செய்திகள் நான் சொன்னது..  என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கம்பீரமான உருவம்.. பட்டொளி வீசி பறக்கணும்… ADMK தானாக வந்து சேரும்… தீயாய் பேசிய டிடிவி ..!!

அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் ஆர் கே நகர் தேர்தல் போதே சொன்னேன், தேர்தல் ஆணையம் அதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள், மெஜாரிட்டி அவர்களிடம் இருக்கு என்பதற்காக அவர்களிடம் கட்சியை கொடுத்துவிட்டார்கள். அது தீயவர்கள் கையில் இருக்கிறது என்று சொல்லி தான் அம்மாவின் தொகுதியில் நாம் வாக்கு சேகரித்தோம், அதில் நாம் வெற்றியும் பெற்றோம். ஆனால் சட்டமன்ற பொது தேர்தல், பாராளுமன்ற பொது தேர்தல் என்று வந்த போது,  மக்கள் அதைத் […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும்”…. ஓபிஎஸ் விருப்பம்….!!!!

சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது :  “சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையால் தான் திமுக ஆளுகின்ற கட்சியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி உள்ளது. இந்த நேரத்தில் எம்ஜிஆரின் தம்பிகளாக அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து வந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடனிருந்து இன்று இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடி % போட்டுக்கோங்க..! அது புலி அல்ல நரி கூட்டம்… டிடிவியை வம்பிழுத்த ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையாக கால்வாய்களை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது. அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு பதவிவெறி இருக்கு..! ADMKகேவலமா போயிட்டு… சங்கடப்பட்டு பேசிய டிடிவி …!!

அமமுகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இங்கே உக்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன். எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளராக, தலைமை கழக நிர்வாகிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போல கிறிஸ்துவ சகோதரர்கள், எல்லா மதங்களிலும் சங்கமம் இது, எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கே பொறுப்பில் இருக்கிறார்கள், மேடையிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்கள்.. இதைத் தவிர வேறு எந்த பாகுபாடும் நம்மிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி அமைப்பது உறுதி…! பட்டிதொட்டியெங்கும் போங்க… டிடிவி அதிரடி உத்தரவு …!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு மாநில கட்சி, நான் தனித்து நின்று எந்த பயனும் அல்ல, ஏனென்றால் நமக்கு பிரதம மந்திரி வேட்பாளர்கள் யாரையும் சொல்ல முடியாது. அதனால் இந்தியாவின் பிரதமரை உருவாக்குகின்ற அணியை போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும் என்றால், இரண்டு தேசிய கட்சியில் ஒரு கட்சியோடு தான் நாம் கூட்டணி அமைப்போம். அதனால் பாராளுமன்ற தேர்தலோடு,  […]

Categories
மாநில செய்திகள்

டிடிவி தினகரனுக்கு….. உற்சாக வரவேற்பு அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்….. அடுத்தடுத்து டிவிஸ்ட்….!!!!

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸிற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார். அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் இப்படி சொல்லிட்டு…! இனிமே ஒன்னும் செய்யமுடியாது … எல்லாமே போச்சு

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சின்னம்மா அவங்க முயற்சி வெற்றி பெறுவதற்கு நான் வாழ்த்துகிறேன். நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்களுடைய சின்னம் குக்கர் சின்னம். நாங்க வெற்றி பெறனும் அம்மாவோட ஆட்சி அமைக்கணும், அம்மாவின் உண்மையான ஆட்சி அமைக்கணும் என நாங்க மக்கள் மன்றத்துல உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால இன்னொரு கட்சி வீணா போகுதுன்னு வருத்தம் தான் பட முடியும், வேற என்ன செய்ய முடியும். இப்போ ஒரு சொத்து இருக்கு; மூதாதையர்கள் சொத்துன்னு வச்சுக்கோங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சிங்கங்கள்…! ADMKவில் இருப்பது அசிங்கங்கள்…. போட்டு தாக்கிய டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,   நம்ம ஊரில் சொல்வார்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான், அதைபோன்று உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பை செய்தவன் தண்டனை பெற வேண்டும். நாங்கள் திணை விதைத்தவர்கள், நாங்கள் திணை அறுப்போம்.  ஏதோ கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் எனது கட்சியே போய்விட்டது என்றார்கள், இன்றைக்கு தலைமை கழக நிர்வாகிகள் மட்டும் தான் இருக்கிறார்கள் 320 பேர் இருக்கிறார்கள் எல்லாரும் என் உடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSஐ சந்தித்தேன்…. அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள்…. டிடிவி தினகரன் புதிய ட்விஸ்ட்…..!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே தற்போது இரண்டாகி நிற்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்தால் வருத்தமாக உள்ளது என்று டிடிவி தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம் எனக்கூறி அவர், தர்மயுத்தம் தொடங்கிய போது எனது நண்பர் ஓபிஎஸ்-ஐ சந்தித்தேன். அதற்குப் பிறகு சந்திக்கவில்லை. பதவி கொடுத்த பிறகு தான் இபிஎஸ் குணம் தெரிந்தது. இன்னும்கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் தான் திமுகவிற்கு சாவு மணி அடிப்போம் – டிடிவி செம உறுதி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அம்மாவினுடைய, புரட்சித்தலைவர் உடைய கட்சி வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று சொல்லலாம், ஏனென்றால் புரட்சித்தலைவர் சந்தியா ஸ்டுடியோவில் பொதுக்குழு கூட்டிய காலத்திலே கேள்விப்பட்டிருக்கிறோம், அதுபோன்ற அம்மாவின் பொதுக்கூட்டம் சிறப்பாக ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கும். சரித்திரத்தில் இது போன்ற ஒரு தவறாக நிகழ்ச்சி தமிழ்நாடு மட்டுமல்ல, உலகத்தில் எந்த ஒரு அரசியல் பொதுக்குழுவை நடக்கக்கூடாத நிகழ்ச்சி  நடத்த ஒரு கருப்பு நாளாக இருக்கிறது. தீய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மண்ணை அள்ளி போட்டுடுச்சு…! அதிமுக அழிஞ்சு போயிரும்…! டிடிவி என்ன இப்படி சொல்லிட்டாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவுடைய கொள்கைகளை,  அம்மாவுடன் லட்சியங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருவோம். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே அம்மாவினுடைய கட்சி, இன்றைக்கு தவறானவர்கள் கைகளில் மாட்டி விட்டது. அந்த புனித சின்னம் எம்.என். நம்பியர் கையிலேயே மாட்டியது போல் இருக்கிறது என்று அன்றிலிருந்தே சொல்லி கொண்டே இருக்கிறேன், அது உண்மையாக இருக்கிறது. வருங்காலத்தில் அதை […]

Categories
மாநில செய்திகள்

“அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை”….. டி.டி.வி தினகரன் கண்டனம்….!!!!

தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் படுகொலை களமாக மாறுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு வே.சுப்பிரமணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்தேன், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வே.சுப்பிரமணி படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து உரிய நண்டனைப் பெற்றுத்தர வேண்டும். தலைநகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான்….. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ” திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வி.மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? தி.மு.க. […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநா் அளித்த தேநீா் விருந்து”… தமிழ்நாடு அரசு இப்படி செய்தது தவறில்லை…. டிடிவி தினகரன் பேட்டி…..!!!!!!

ஆளுநா் அளித்த தேநீா் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது தவறில்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தார். சென்னையில் கடந்த சனிக்கிழமை டி.டி.வி தினகரன் அளித்த பேட்டியில் “நீட் தோ்வை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரியை 150 % வரை அதிகரித்துள்ளது. அனைத்துக்கும் போராடும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக்கட்சிகள் இதற்காகப் போராடவில்லை. ஆனால் மக்களுக்கு எதிரான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு தீய சக்தி…. விரைவில் ஆட்சிக்கு ஆபத்து…. டிடிவி தினகரன்….!!!!

திமுக ஒரு தீய சக்தி என்றும் திமுக ஆட்சிக்கு விரைவில் ஆபத்து வரும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. ஆட்சிக்கு வந்தவுடன் 150% சொத்து வரியை உயர்த்தி மக்களை கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு போராடும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை? , பெட்ரோல் மற்றும் டீசல் விலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் ஒரு நிரபராதி”…. டிடிவி தினகரன் அதிரடி பேட்டி…..!!!!

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி என 10 மணி நேரம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு முன்பு நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் திருச்சி தொகுதியின் எம்பி. குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார்.அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின்பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசினார் என்று தினகரன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் கோரி இருந்தார். இதையடுத்து தினகரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக ஆட்சி 23ஆம் புலிகேசி ஆட்சி”…. டிடிவி. தினகரன் கடும் விமர்சனம்…..!!!

தமிழக முதல்வரையும் அமைச்சர்களின் செயல்பாட்டையும் பார்த்தால் “23 ஆம் புலிகேசி” திரைப்பட கதையை போலவே உள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அதிமுக-அமமுக கட்சிகள் இணைப்பு என்ற பேச்சுகள் தொடர்ந்து காற்றுவாக்கில் வந்து கொண்டிருக்கும் செய்திகள் தான். அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியையும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது 23 ஆம் புலிகேசி திரைப்பட கதையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவி தினகரனுக்கு இறுகும் பிடி….டெல்லியில் இருந்து வந்த லெட்டர்…பெரும் பரபரப்பு…!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெ.ஜெயலலிதா, கடந்த 2016,டிசம்பர் 5 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பின், அதிமுக அரசு இரண்டாக பிளவுபட்டு, வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியும் உருவானது. இதை அடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றதால், அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக  பொறுப்பேற்றார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் […]

Categories
அரசியல்

இதுதான் நீங்கள் தமிழ்நாட்டுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா….? டிடிவி தினகரன் சாடல்….!!!

சொத்து வரி உயர்த்தியது தொடர்பாக தமிழக அரசுக்கு அமமுக  பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகம் முழுவதும் சொத்து வரியை நூறு சதவீதம் வரை திமுக அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா? கொரோனா பாதிப்புக்கு பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்பட தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது […]

Categories
அரசியல்

விருப்பம் இல்லாமல் தான் கட்சி ஆரம்பித்தேன்….!! டிடிவி தினகரன் ஓபன் டாக்…!!

டிடிவி தினகரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “வெற்றி தோல்வி இரண்டையும் சரியான மனநிலையோடு […]

Categories
அரசியல்

“ஜெயலலிதா இறப்பு”…. பின்னணி என்ன?…. டி.டி.வி. தினகரன் விளக்கம்…..!!!!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நேற்று (மார்ச்.7) மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது, உண்மையாகவே உடல் நலக்குறைவு காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்தார். இதனிடையில் ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டு உள்ளது. எந்த முடிவாகினும் ஜெயலலிதாவே எடுத்து இருப்பார். தேவையின்றி எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டில் தூங்க முடியாது..! இது என்ன பிசினஸா ? போர்க்களம் சார்… சண்டை செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கொரோனா காலத்திலும் தேர்தல் வைப்பது ஆளுங்கட்சியின் உடைய இயலாமை என்று சொல்கிறேன். சுப்ரீம் கோர்ட்டில் போய் அவர்கள் சொல்ல வேண்டும். ஓமைக்கிறான் பரவல் அதிகமாக இருக்கின்றது,  பிப்ரவரியில் குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் எல்லாம் சொல்கிறார்கள். அதனால மார்ச்சில் தேர்தல் வைக்க எங்களை அனுமதிங்கள் என்று சொல்லலாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 7 கட்டம், 8 கட்டமாக நடத்துகிறார்கள். கொஞ்ச  கொஞ்ச தொகுதியா நடத்துகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 20 நாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயந்துட்டேனு சொல்லுவீங்க…! 1இல்ல… 2இல்ல… 12,800 வார்டில் போட்டி… அதிரடி காட்டும் அமமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 12,800 வார்டில் போட்டியிட வேண்டும் என்று தான், எங்களுடைய வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. சென்னைக்கு  பெண் மேயராக வருவது நல்லது தானே. நான் என்ன நினைத்தேன் என்றால்…. தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இப்போது தான் ஓமிக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆகும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெருத்தெருவா இறங்கிடுச்சு…! முழு வேகத்தில் திமுக… கவிஞர் வைரமுத்து கவிதை சொன்ன டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புறோம். திமுகவின் உண்மை முகம் சுலபமாக வெளிப்படத் தொடங்கி விட்டது.  பத்து வருடமாக காஞ்சு போயிருந்த திமுகவினருக்கு, காஞ்சமாடு  மாடு புகுந்த மாதிரி புகுந்திருக்கிறார்கள். விடியல் அரசு என சொன்னாங்க. திமுகவிற்கு விடியலுக்காக அவங்க தெருத்தெருவா அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திமுக எப்படிப்பட்ட கட்சி என தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருக்கின்றேன். கவிஞர் வைரமுத்து கவிதை சொன்னேன்.. பட்டுவேட்டி காக […]

Categories
அரசியல்

அதிகாரிகளே இப்படியா செய்யுறது?…. இதை ஏத்துக்கவே முடியாது!…. டிடிவி கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது உட்கார்ந்திருந்த அதிகாரிகள்… டிடிவி தினகரன் கண்டனம்…!!!

அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடியரசு தினவிழா அன்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தி.மு.க வின் எம்பியான கனிமொழி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், கவிஞர் […]

Categories
அரசியல்

தமிழுக்காக இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கான நாளில்…. “திருக்குறளை தேசிய நூலாக்க உறுதி ஏற்போம்”…. டி.டி.வி. தினகரன்….!!!

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாய்த்தமிழை உயிருக்கு நிகராக நேசித்து இன்னுயிரையும் தமிழ் மொழிக்காக தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம். மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் திருக்குறளை தேசிய நூலாக்கவும், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும் உறுதி ஏற்றிடுவோம்” என்று கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்த நாட்டுக்காக ரத்தம் சிந்தியவர்களுக்கு!”…. தேசம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா?…. பொங்கி எழுந்த டிடிவி….!!!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசு அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் இடம்பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கடும் கண்டனத்திற்கு உரியது. “அனல் பறக்கும் கவிதைகளால் மக்களிடையே […]

Categories
அரசியல்

எல்லா கட்டுப்பாடும் சரி தான்….! டாஸ்மாக்கை மட்டும் ஏன் மூடல….? சரமாரியாக கேள்வி எழுப்பும் டிடிவி…..!!!

அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன், தமிழகத்தில் கொரோனா காரணமாக பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை அடைக்காததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தை குறைக்க பல புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நாளையிலிருந்து நாடு முழுக்க இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இணையதள வகுப்புகள், மருத்துவம் தவிர கல்லூரிகள் அனைத்திற்கும் இம்மாதம் 20ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடல்…. டிடிவி தினகரன் கண்டனம்….!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார். இதற்கு டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அம்மா பெயரில் உள்ள திட்டங்களை மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் வலிமையோடு வளர்ச்சி பாதையில் செல்ல…. புத்தாண்டு வாழ்த்து…. டிடிவி தினகரன்….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்தை வலிமையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இந்த புத்தாண்டு விதைக்கட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

திமுக என்றாலே தில்லுமுல்லு? டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

தமிழ்நாடு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளருமான டிடிவி தினகரன் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அவை என்னவென்றால், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திரும்பப் பெறவில்லை என்றால் திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள். திமுக […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. உடனே இந்த அறிவிப்பை ரத்து செய்யுங்க…. டிடிவி தினகரன்….!!!!

கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.  இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி”…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது…..!!!

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அணியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பலரும் பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னென்னெல்லாம் பேசுனாங்க ? திமுக சுயரூபம் தெரியுது…! டிடிவி சாடல்

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஒரு அரசாங்கம் வந்தாலே ஒரு ஆறு மாதம் அவர்களுக்கு காலம் கொடுக்க வேண்டும், அது முடிந்துவிட்டது, இதிலேயே அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும், முதலமைச்சர் என்ன சொன்னாரு தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு வந்தவுடனே ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார். அதேபோன்று சிறுபான்மை மக்களின் காவலாக காட்டிக்கொண்டு… 7 பேர் விடுதலை எல்லாம் என்ன பேசினார்கள் என்று தெரியும் ? இப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரங்குகள் கையில் சிக்கிய பூமாலை… TVயில் பார்த்து இருப்பீங்க… ஓபிஎஸ், இபிஎஸ் மீது சரமாரி விமர்சனம் …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மீண்டும் தேர்தெடுத்துள்ளார்கள், வேற யாரையும் விருப்பமனு தாக்கல் செய்ய விடல, அதிமுக தலைமை அலுவலகத்திலும் பிரச்சனை நடந்துள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கேலிக்கூத்தாக இருக்குது என்று சொல்வார்கள் அல்லவா… நான் அன்னைக்கே சொன்னேன்,  இது வந்து குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைக்கு அந்த கட்சியினுடைய நிலை இருக்கிறது என்று அன்றைக்கே சொன்னேன், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜதந்திரம்னு சொல்லுவாங்க…! நான் பதில் சொல்ல விரும்பல… அல்லேக்கா நழுவிய டிடிவி …!!

உங்களுக்கும் திருமதி சசிகலா விற்க்கும் சிறு நெருடல் இருப்பதாக, கருத்து வேறுபாடு இருப்பதாக சமூகவலைதளங்களில் வருகிறது இதுபற்றி கேட்டபோது, பதிலளித்த டிடிவி தினகரன் , சமூக வலைத்தளத்தில் சொல்வதெற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, அரசியல் விமர்சகர்களுடைய நிறைய பேருடைய தரம் நமக்கு தெரியும். அதாவது சந்தர்ப்ப வாதத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும் ராஜதந்திரம் என்று சொல்கின்ற சில பேருடைய பேச்சுக்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சசிகலா சிறையில் இருந்து வரும் போது நான் சொன்னேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கார் மீது செருப்பை எரிந்தது நாங்களா.. கொந்தளித்த TTV தினகரன் …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற இடத்தில முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இவர்களால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் இருப்பதனால் அதை திசை திருப்பும் விதமாக நான் தூண்டி எங்கள் தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக ஒரு பொய்யான […]

Categories

Tech |