அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சிகள் இணைவது தொடர்பாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார். இவர் நிகழ்ச்சி முடிவடைந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், தி.மு.க ஆட்சி 23 ஆம் புலிகேசியின் ஆட்சி போல் அமைந்திருக்கிறது. இவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு என மக்களுக்கு தண்டனை வழங்கி வருகின்றனர். […]
