பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது விசிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும் பல்வேறு தரப்பினர் இந்த படத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஜெய்பீம் படத்தில் நடித்திருக்கும் காவல் அதிகாரியை வன்னிய இனத்தவராக காட்சிப் படுத்தியிருப்பதாகவும், அவரது வீட்டில் இருந்த காலண்டரில் அக்னி கலசம் குறியீடு வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அந்த காட்சிகள் மாற்றப்பட்டது. இருப்பினும் பாமக […]
