மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டி.ஜி.பி கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக சிறைத்துறை டிஜிபி ஆக அம்ரேஷ் பூஜாரி சென்ற 4-ம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒருபகுதியாக அவா் தமிழகத்தின் முக்கியமான சிறைச்சாலைகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், […]
