இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை பெறுவதில் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]
