இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், […]
