டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பழமை வாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போதைய கட்டடத்தின் அருகில் மத்திய விஸ்டா மறு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிக்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது அடுத்து சுமார் […]
