பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த டிக்கெட் பரிசோதகர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கோட்டை பகுதியில் வசித்து வந்த முருகன்(53) தனியார் பேருந்து டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயண சீட்டுகளில் சில தவறுகள் இருந்ததால் அதிகாரிகள் முருகனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த முருகன் தனது வீட்டு அருகே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பேரையூர் காவல்நிலையத்திற்கு […]
