நேற்று நடைபெற்ற 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. […]
