தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு எண் வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்திக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வுகளில் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு விண்ணப்பதாரர்கள் தனது நிரந்தர பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. மேலும் ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தர பதிவிற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். […]
