Categories
மாநில செய்திகள்

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா உறுதி…!!

திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தட்டி கேட்கிறோம்…. கதவு திறக்கும்… இல்லைனா…. அதிமுகவுக்கு திமுக எச்சரிக்கை …!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் டிஆர்.பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் ஆணைப்படி, 2,3 நாட்களாக திருவாரூர், நாகை  மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றுவதற்காக செல்லுகின்ற இடமெல்லாம்….. அவர் கருத்துக்களை  தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது திடீர் திடீரென காவல்துறையினர் வந்து கைது செய்து அழைத்துச் செல்கிறது. பின்னர் பல மணி நேரம் காக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு 10 மணி, 11 மணி என்று ஒவ்வொரு நாளும் விடுதலை செய்யப்படுகிறார். மூன்று நாட்களாக அது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?” – அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி

இந்தி திணிப்பு, தமிழக வருவாய் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன என்று, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்திருந்த அமித்ஷா, மத்திய அரசில் இருந்த போது தமிழகத்திற்குக் தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து, டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய […]

Categories

Tech |