பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு தமிழக அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதிரடி ரெய்டுகளை நிறுத்த வேண்டும் என்றம், மதுக்கடையில் நடக்கும் ஊழல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
